இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
மானூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மானூர்;
மானூர் அருகே உள்ள பள்ளமடை வடக்கு தெருவைச் சேர்ந்தவர் காஞ்சான முத்து. டிரைவர். இவருடைய மனைவி மாலதி (வயது 23). இவர்களுக்கு திருமணம் முடிந்து ஒரு வருடமாகிறது. இந்நிலையில் குடும்ப தகராறும் இருந்து வந்துள்ளது. இதனால் மனம் வெறுப்பு அடைந்த மாலதி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் மானூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாலதியின் உடலை கைப்பற்றி பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story