2-வது கட்ட கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது


2-வது கட்ட கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 13 Feb 2021 9:57 PM GMT (Updated: 13 Feb 2021 9:57 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் 2-வது கட்ட கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 2-வது கட்ட கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
கொரோனா
கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணியில் விஞ்ஞானிகள் தீவிரம் காட்டினர். இந்தியாவில் 2 வகையான கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் முதல்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு கடந்த    மாதம் 16-ந் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டது.ஈரோடு அரசு ஆஸ்பத்திரி உள்பட ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 5 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. அதன்பிறகு சுதா ஆஸ்பத்திரி, லோட்டஸ் ஆஸ்பத்திரி ஆகிய தனியார் ஆஸ்பத்திரிகளிலும் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. முதலில் டாக்டர்கள், செவிலியர்கள், ஆஸ்பத்திரி பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதன்பிறகு அரசு ஊழியர்களுக்கு போடும் பணி தொடங்கப்பட்டது.
 2-வது கட்ட தடுப்பூசி
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை சுமார் 4 ஆயிரத்து 400 பேர் தடுப்பூசி போட்டு கொண்டார்கள். முதல் தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்களுக்கு 28 நாட்களுக்கு பிறகு 2-வது தடுப்பூசி போட வேண்டும். இந்தநிலையில் கடந்த மாதம் 16-ந் தேதி தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு 2-வது கட்ட தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. ஈரோடு அரசு ஆஸ்பத்திரி உள்பட 5 மையங்களிலும் டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் தடுப்பூசி போட்டு கொண்டனர்.
இதன்தொடர்ச்சியாக வயதானவர்கள், நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story