திருவாரூர் அருகே ரூ.3.61 கோடி மதிப்பில் சாலை பணி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் ஆய்வு


திருவாரூர் அருகே ரூ.3.61 கோடி மதிப்பில் சாலை பணி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் ஆய்வு
x
தினத்தந்தி 14 Feb 2021 5:22 AM GMT (Updated: 14 Feb 2021 5:22 AM GMT)

திருவாரூர் அருகே ரூ.3.61 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் சாலை பணிகளை நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் கீதா ஆய்வு செய்தார்.

திருவாரூர், 

திருவாரூர் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தில் மழையினால் சேதமடைந்த சாலைகளை மேம்படுத்தி சீரமைப்பு பணிகள் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் மூலம் நடைபெற்று வருகிறது. அதன்படி திருவாரூர் அருகே புலிவலம் முதல் வெள்ளக்குடி வரை உள்ள சாலை ரூ.3 கோடியே 61 லட்சம் மதிப்பில் மேம்படுத்தி சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

ஆய்வு

இந்த பணிகளை சென்னை நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் கீதா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சாலை பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அப்போது திருவாரூர் கோட்ட பொறியாளர் ரா.சிவக்குமார், தரக்கட்டுபாடு கோட்ட பொறியாளர் சிவக்குமார், உதவி செயற்பொறியாளர் சந்திரசேகரன், இளநிலை பொறியாளர் குமாரசெல்வன் ஆகியோர் இருந்தனர்.

Next Story