ஆழ்கடல் மீன்பிடி தொழிலை ஊக்கப்படுத்த வேண்டும்-நவாஸ்கனி எம்.பி. வலியுறுத்தல்


ஆழ்கடல் மீன்பிடி தொழிலை ஊக்கப்படுத்த வேண்டும்-நவாஸ்கனி எம்.பி. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 14 Feb 2021 5:46 PM GMT (Updated: 14 Feb 2021 5:46 PM GMT)

மீனவர்கள் தாக்கப்படுவதை கட்டுப்படுத்த ஆழ்கடல் மீன்பிடிதொழிலை ஊக்கப்படுத்த வேண்டும் என்று நவாஸ்கனி எம்.பி. வலியுறுத்தி உள்ளார்

பனைக்குளம், பிப்.15-
மீனவர்கள் தாக்கப்படுவதை கட்டுப்படுத்த ஆழ்கடல் மீன்பிடிதொழிலை ஊக்கப்படுத்த வேண்டும் என்று நவாஸ்கனி எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.
நிவாரணம்
ராமநாதபுரம் தொகுதி எம்.பி. நவாஸ்கனி கூறியதாவது:-
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிப்பு வெறும் அறிவிப்பாகவே இருக்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மழையால் பயிர்கள் வீணாகி விட்டதால் விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும். மீனவர்கள் தாக்கப்படுவதை கட்டுப்படுத்த ஆழ்கடல் மீன்பிடி தொழிலை ஊக்கப்படுத்த வேண்டும். 
கடந்த நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக பயன்படுத்தப்படாமல் உள்ள நிலையில், தற்போது மத்திய பட்ஜெட்டில் சிறுபான்மையினர் நலனுக்கான நிதி ஒதுக்கீடு குறைப்பு, சிறுபான்மையினர் நலனுக்கு கடந்த ஆண்டு ரூ.5,029 கோடி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மத்திய பட்ஜெட்டில் இந்த நிதி ரூ.4,810 கோடியாக குறைக்கப்பட்டு உள்ளது. சிறுபான்மையினர் கல்வித் தொகைக்கான உதவித்தொகையும் 6 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது. 
ஏமாற்றம்
இது சிறுபான்மையினர் மீது இந்த அரசின் அக்கறை யின்மையை காட்டுக்கிறது. முன்னறிவிப்பு இல்லாத பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக உதவும் வண்ணம் எந்தவித அறிவிப்பும் இல்லாதது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் பெரும் விலையேற்றத்தை கண்டிருக்கிறது. அதனால் மக்களின் அத்தியாவசிய பொருட்களின் விலையும் ஏற்றம் அடையக் கூடிய அபாயத்தில் இருக்கிறது. இதற்கு இந்த அரசு என்ன தீர்வு வைத்திருக்கிறது. 
விவசாயம் நம் நாட்டின் முதுகெலும்பு. ஆனால் இன்று லட்சக்கணக்கான விவசாயிகள் வீதிகளில் நின்று போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள அரசு முன்வர வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தில் மழையின் காரணமாக அறுவடை நேரத்தில் பயிர்கள் வீணாகி விட்டதால் விவசாயிகள் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளனர்.
எனவே அந்த விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்க அரசு முன்வர வேண்டும். 
இவ்வாறு அவர் கூறினார். 

Next Story