எஸ்.ஐ.சி. முகவர்கள் சங்க கூட்டம்


எஸ்.ஐ.சி. முகவர்கள் சங்க கூட்டம்
x
தினத்தந்தி 14 Feb 2021 6:18 PM GMT (Updated: 14 Feb 2021 6:18 PM GMT)

எஸ்.ஐ.சி. முகவர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது.

கரூர்
கரூர் அரசு ஊழியர் சங்க கூட்டரங்கில் நேற்று அகில இந்திய எல்.ஐ.சி. முகவர்கள் சங்க மாவட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். தஞ்சை கோட்ட பொதுச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். கிளை பொருளாளர் ஜெகதீஸ் வரவேற்று பேசினார். கூட்டத்தில், எல்.ஐ.சி. மற்றும் பிரீமியம் பாயிண்ட்களில் பிரீமியம் செலுத்தும் பழைய முறையையே தடையின்றி தொடர வேண்டும், காப்பீட்டுத்துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 49 சதவீதம் முதல் 74 சதவிகிதம் வரை உயர்த்துவதை திரும்பப் பெற வேண்டும், பட்ஜெட்டில் எல்.ஐ.சி. பங்குகள், பங்குச் சந்தையில் இந்த நிதியாண்டிலேயே பட்டியலிடப்படும் என்ற அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்ப்பதை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், தஞ்சை கோட்ட தலைவர் தங்கமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story