மாவட்ட செய்திகள்

அரக்கோணம் அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை + "||" + Valipar commits suicide by drinking poison

அரக்கோணம் அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

அரக்கோணம் அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
அரக்கோணம் அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
அரக்கோணம்,

அரக்கோணத்தை அடுத்த சின்னமோசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரின் மகன் சேட்டு (வயது 21). வெங்கடேசன், 11-ந்தேதி வீட்டில் இருந்த சேட்டுவை வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றுகிறாேய? எனக்ேகட்டு திட்டியதாகக் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த சேட்டு, வீட்டில் வயலுக்குத் ெதளிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) சாப்பிட்டு விட்டு மயக்கமடைந்து கிடந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு முதலுதவி அளித்து, பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று காலை சிகிச்சை பலனின்றி சேட்டு பரிதாபமாக உயிரிழந்தார். அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
மார்த்தாண்டம் அருகே போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றதால் மனமுைடந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.