மாவட்ட செய்திகள்

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற கணவர் + "||" + Husband stabs wife with suspicion of misconduct

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற கணவர்

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற கணவர்
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
நடத்தையில் சந்தேகம்
மாதவரம் பால்பண்ணை, மாத்தூர் எம்.எம்.டி.ஏ. முதல் பிரதான சாலையை சேர்ந்தவர் எட்வர்ட் லாரன்ஸ். தச்சு வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சரோவர்ஷா (வயது 41). இவர்களுக்கு 21 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. 20 மற்றும் 18 வயதில் 2 மகள்கள் உள்ளனர்.மனைவி சரோவர்ஷாவின் நடத்தையில் சந்தேகம் அடைந்த எட்வர்ட் லாரன்ஸ் இது தொடர்பாக அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்து வந்தார்.

கத்தியால் குத்திக்கொலை
வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவும் இதுதொடர்பாக கணவன்-மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த எட்வர்ட் லாரன்ஸ் வீட்டின் சமையல் அறையில் இருந்த கத்தியால் மனைவி சரோவர்ஷாவின் கழுத்து, மார்பு, வயிறு ஆகிய பகுதிகளில் சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதில் பலத்த காயம் அடைந்த சரோவர்ஷா, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சரோவர்ஷா நேற்று பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து மாதவரம் பால்பண்ணை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து தலைமறைவான எட்வர்ட் லாரன்சை வலைவீசி தேடி வருகிறார்.