நாமக்கல்லில் மாவட்ட வில்வித்தை போட்டி


நாமக்கல்லில் மாவட்ட வில்வித்தை போட்டி
x
தினத்தந்தி 15 Feb 2021 7:12 PM GMT (Updated: 15 Feb 2021 7:12 PM GMT)

நாமக்கல்லில் மாவட்ட அளவில் வில்வித்தை போட்டி நடந்தது.

நாமக்கல்:
நாமக்கல்லில் மாவட்ட அளவில் வில்வித்தை போட்டி நடந்தது.
வில்வித்தை போட்டி
சென்னையில் வருகிற 21-ந் தேதி முதல் வருகிற 27-ந் தேதி வரை மாநில அளவிலான வில்வித்தை போட்டி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள விளையாட்டு அரங்கத்தில் தமிழ்நாடு வில்வித்தை சங்கத்தின் சார்பில் மாவட்ட அளவிலான வில்வித்தை போட்டி நடத்தப்பட்டது.
இந்த போட்டியில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வீரர், வீராங்கனைகள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 10, 14, 17, 19 வயதுக்கு கீழ் உள்ளோர் பிரிவு மற்றும் சீனியர் வீரர்களுக்கான பிரிவு என 5 வகையில் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டிக்கு நாமக்கல் மாவட்ட வில்வித்தை சங்கத்தின் பொதுச்செயலாளர் கேசவன் தலைமை தாங்கினார். மாவட்ட விளையாட்டு அலுவலர் அனந்த நாராயணன் போட்டியை தொடங்கி வைத்தார்.
சான்றிதழ்
இந்தியன், ரீகர்வ், காம்பவுண்ட் என மூன்று வகையில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன. இதில் அதிகப்புள்ளிகள் பெற்ற 23 வீரர், வீராங்கனைகள் மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இந்த வில்வித்தை போட்டிக்கான ஏற்பாடுகளை நாமக்கல் மாவட்ட வில்வித்தை சங்கத்தின் பயிற்சியாளர் கண்ணன், துணைத்தலைவர் குமார், ரமேஷ் ஆகியோர் செய்து இருந்தனர்.

Next Story