செல்லியாரம்மன் கோவில் கும்பாபிஷேகம்


செல்லியாரம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 15 Feb 2021 8:02 PM GMT (Updated: 15 Feb 2021 8:02 PM GMT)

செல்லியாரம்மன் கோவில் கும்பாபிஷேகம்

ஆலங்குளம், 
ஆலங்குளம் அருகே ஏ.லட்சுமிபுரம் கிராமத்தில் பழமையான செல்லியாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் செய்ய முடிவு செய்யப்பட்டு நடைபெற்றன. பணிகள் நிறைவுபெற்ற நிலையில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக செல்லியாரம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஆலங்குளம், சுண்டங்குளம், ராமுத்தேவன்பட்டி. கண்மாய் பட்டி, கீழாண் மறைநாடு, கோபாலபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை ஏ.லட்சுமிபுரம் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Next Story