மாவட்ட செய்திகள்

புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்களுடன் முதலமைச்சர் நாராயணசாமி அவசர ஆலோசனை + "||" + Chief Minister Narayanasamy holds urgent consultation with Puducherry legislators

புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்களுடன் முதலமைச்சர் நாராயணசாமி அவசர ஆலோசனை

புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்களுடன் முதலமைச்சர் நாராயணசாமி அவசர ஆலோசனை
காங்கிரஸ் கட்சியில் இருந்து இதுவரை 4 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில், நாராயணசாமி ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி,

புதுச்சேரி சட்டமன்றத்தை பொறுத்தவரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 30, நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 என 33 பேர் இருப்பார்கள். கட்சி தாவல் நடவடிக்கை காரணமாக பாகூர் தொகுதி எம்.எல்.ஏ. தனவேலுவின் பதவி பறிக்கப்பட்டது.

சமீபத்தில் பா.ஜனதாவில் இணைந்த நமச்சிவாயம், தீப்பாய்ந்தான் ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். அதைத்தொடர்ந்து மல்லாடி கிரு‌‌ஷ்ணாராவும் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதையடுத்து, காமராஜ் நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சபாநாயகர் சிவக்கொழுந்தை பேரவையில் சந்தித்து ஜான்குமார் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து வருவது புதுவை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பான்மைக்கு 16 இடங்கள் தேவை என்ற நிலையில், ஆளும் காங்கிரஸ் கூட்டணியின் பலம் 14 ஆக குறைந்துள்ளது. இதனால் நாராயணசாமி ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்களுடன் முதலமைச்சர் நாராயணசாமி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. புதுச்சேரியில் ரெம்டெசிவர் மருந்து தட்டுப்பாடு இல்லை - துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர‌ராஜன்
புதுச்சேரியில் ரெம்டெசிவர் மருந்து தட்டுப்பாடு இல்லை என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர‌ராஜன் தெரிவித்துள்ளார்.
2. புதுச்சேரியில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு - துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அறிவிப்பு
புதுச்சேரியில் நாளை முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அறிவித்துள்ளார்.
3. புதுச்சேரியில் இரவுநேர ஊரடங்கு? - கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பதில்
புதுச்சேரியில் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? என்பதற்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பதில் அளித்தார்.
4. புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி வாக்களித்தார்
புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தனது வாக்கை பதிவு செய்தார்.
5. புதுச்சேரியில் இன்று சட்டசபை தேர்தல்: 30 தொகுதிகளில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு
புதுச்சேரி சட்டசபை தேர்தல் இன்று நடக்கிறது. இதில் அங்குள்ள 30 தொகுதிகளில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்குகிறது.