நடிகர் சுஷாந்த் சிங்கின் சகோதரி மீதான வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட்டு மறுப்பு


நடிகர் சுஷாந்த் சிங்கின் சகோதரி மீதான வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட்டு மறுப்பு
x
தினத்தந்தி 16 Feb 2021 11:30 AM GMT (Updated: 16 Feb 2021 11:30 AM GMT)

நடிகர் சுஷாந்த் சிங்கின் சகோதரி மீதான வழக்கை ரத்து செய்ய மும்பை ஐகோர்ட்டு மறுத்து உள்ளது.

சகோதரிகள் மீது வழக்குப்பதிவு
நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஆண்டு ஜூன் மாதம் பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இதில் நடிகரின் தந்தை அளித்த புகாரின் பேரில் சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது காதலியும், நடிகையுமான ரியா சக்கரவர்த்தி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே சுஷாந்த் சிங்கிற்கு அவரது சகோதரிகள் பிரியங்கா சிங், மீத்து சிங், டெல்லியை சேர்ந்த டாக்டர் தருண் குமார் ஆகியோர் போலி மருந்து சீட்டு மூலம் மனநல மருந்துகளை வழங்கி மோசடியில் ஈடுபட்டதாக புகார் அளித்து இருந்தார். மேலும் அவர் சட்டவிரோதமாக கொடுத்த மருந்தால் தான் சுஷாந்த் சிங் மரணம் ஏற்பட்டதாக கூறியிருந்தார்.

இந்த புகார் குறித்து பாந்திரா போலீசார் பிரியங்கா சிங், மீத்து சிங் மற்றும் டாக்டர் மீது வழக்குப்பதிவு செய்து இருந்தனர்.

ரத்து செய்ய மறுப்பு
இந்த வழக்கை ரத்து செய்ய கோரி சுஷாந்த் சிங்கின் சகோதரிகள் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ். ஷிண்டே, எம்.எஸ். கார்னிக் மீத்து சிங் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டனர். அதே நேரத்தில் பிரியங்கா சிங் மீதான வழக்கை ரத்து செய்ய மறுத்தனர். நீதிபதிகள் அவர் மீதான குற்றச்சாட்டு ஆதாரங்கள் இருப்பதாகவும், அது விசாரிக்கப்பட வேண்டும் என்றனர்.

Next Story