எலத்தகிரியில், எருது விடும் விழா 10 பேர் காயம்


எலத்தகிரியில், எருது விடும் விழா 10 பேர் காயம்
x
தினத்தந்தி 16 Feb 2021 7:23 PM GMT (Updated: 16 Feb 2021 7:28 PM GMT)

பர்கூர் அருகே எலத்தகிரியில் எருது விடும் விழா நடந்தது. இதில் 10 பேர் காயம் அடைந்தனர்.

பர்கூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் எலத்தகிரி கிராமத்தில் நேற்று எருது விடும் திருவிழா நடந்தது. இந்த விழாவில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி,  திருப்பத்தூர், வேலூர் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் இருந்தும், ஆந்திராவில் இருந்தும் 200-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டன.  

அந்த காளைகளை ஒரு குறிப்பிட்ட தூரம் வரை ஓட விட்டு, அதில் எந்த காளை குறைந்த நேரத்தில் ஓடி கடந்தது என்பதை கணக்கிட்டு, அந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அதன்படி, 40 காளைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.4 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. 

இந்த விழாவை காண எலத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரம் இளைஞர்கள் வந்திருந்தனர். விழாவின் போது காளைகள் முட்டி 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விழாவையொட்டி பர்கூர் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.

Next Story