அதியமான்கோட்டை அருகே 3 வீடுகளின் பூட்டுகளை உடைத்து திருட முயற்சி


அதியமான்கோட்டை அருகே 3 வீடுகளின் பூட்டுகளை உடைத்து திருட முயற்சி
x
தினத்தந்தி 16 Feb 2021 8:13 PM GMT (Updated: 2021-02-17T01:57:57+05:30)

அதியமான்கோட்டை அருகே 3 வீடுகளின் பூட்டுகளை உடைத்து திருட முயன்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

நல்லம்பள்ளி,

நல்லம்பள்ளி அருகே உள்ள அதியமான்கோட்டை அக்ரி நகரை சேர்ந்தவர் ராமாதேவி. இதே பகுதியை சேர்ந்தவர் திருப்பதி. இவர்களுக்கு வீடுகள் அருகருகே உள்ளன. இவர்களின் வீடுகளில் நேற்று முன்தினம் மர்ம நபர்கள் பூட்டுகளை உடைத்து உள்ளனர். சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்தவர்கள், சத்தம் போட்டதால் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். 

இதேபோல் எர்ரப்பட்டி கிராமத்தில் 70 வயது மதிக்கத்தக்க முதியவரின் வீட்டிலும் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து திருட முயன்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story