ரூ.1 கோடிக்கு பருத்தி விற்பனை


ரூ.1 கோடிக்கு பருத்தி விற்பனை
x
தினத்தந்தி 17 Feb 2021 5:07 PM GMT (Updated: 17 Feb 2021 5:07 PM GMT)

கள்ளக்குறிச்சி வாரச்சந்தையில் ரூ.1 கோடிக்கு பருத்தி விற்பனையானது.

கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி நேபால் தெருவில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் புதன் கிழமை அன்று பருத்தி சந்தை நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று நடந்த வாரச்சந்தைக்கு   கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 884 விவசாயிகள் 5232 பருத்தி மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். 
ஆத்தூர், மகுடஞ்சாவடி, கொங்கனாபுரம், சத்தியமங்கலம், புஞ்சை புளியம்பட்டி, அன்னூர், திருப்பூர், விழுப்புரம், கும்பகோணம் ஆகிய பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு போட்டி போட்டு பருத்தியை கொள்முதல் செய்தனர். 

விற்பனை

இதில்  ஒரு குவிண்டால் எல்.ஆர்.ஏ.ரகம் பருத்தி அதிகபட்சமாக ரூ.7714 -க்கும், குறைந்தபட்சமாக ரூ.4628 -க்கு விற்பனையானது. இதன் மூலம் மொத்தம் ரூ.1 கோடியை 17 லட்சத்திற்கு பருத்தி விற்பனையானது. இந்த தகவலை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குனர் சஞ்சீவி தெரிவித்துள்ளார்.

Next Story