ஸ்மார்ட் ஆக மாறிய கோவை நகரம்


அலங்கார வடிவமைப்புகள்
x
அலங்கார வடிவமைப்புகள்
தினத்தந்தி 17 Feb 2021 5:12 PM GMT (Updated: 17 Feb 2021 5:17 PM GMT)

ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன. ஆகவே கோவை நகரம் ஸ்மார்ட்ஆக மாறியுள்ளது

கோவை,

கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளங்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.  இந்த பணிகள் நிறைவுபெறும் நிலையில் உள்ளது.  இந்த பணிகள் முடிந்து அனைவரையும் கொள்ளை கொள்ளப்போகுது கோவை அழகு என்கிற நிலைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில்  குளங்களை பொறுத்தவரை உக்கடம் பெரிய குள பகுதியில் 1.2 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.39.74 கோடி மதிப்பீட்டிலும், பேஸ் 1 பகுதியில் 4.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.62 கோடி மதிப்பீட்டிலும் புனரமைத்து, சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 

குளத்தை சுற்றிலும் உள்ள கரைகளை பலப்படுத்தும் பணிகள் முடிந்து, இவற்றில் இயற்கை முறையில் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல், மிதிவண்டி பாதை அமைத்தல், பூங்காக்கள் அமைத்தல், சிற்றுண்டி உணவகம் அமைத்தல், மிதக்கும் நடைபாதைகள் அமைப்பதற்கான பணிகள், பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட விளையாட்டு தளங்கள் அமைத்தல், பாதசாரிகள் பாதை அமைத்தல், வண்ண விளக்குகள் அமைத்தல், நீர்வழிப்பாதை மேம்படுத்துதல், குளத்திலுள்ள ஆகாயத்தாமரை அப்புறப்படுத்துதல் ஆகிய பணிகள் நடைபெற்று வருகிறது.

இதே போல் வாலாங்குளம் பகுதியில் ரூ.48 கோடி செலவில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. குளக்கரையை அலங்காரப்படுத்தும் இந்த பணிகளும் பெரும்பாலும் முடிவுற்றுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது

கோவை உக்கடம் பெரியகுளம் மற்றும் வாலாங்குளக்கரை பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் சுமார் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன. விரைவில் அனைத்து பணிகளும் நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும். 

அப்போது பொதுமக்கள் குடும்பத்துடன் குதுகலமாக வந்து பொழுது போக்கலாம். சுற்றுப்புறசூழலில் மனதை மயக்கும் அம்சங்கள் அதில் இடம் பெற்றுள்ளன. இந்த நிலையில் கோவை நகரம் ஸ்மார்ட் ஆக மாறியது என்றே கூறலாம் என்றனர்.

இதுபோல் கோவை ஆர்.எஸ்.புரம் டி.பி. ரோடு மாநகராட்சி சார்பில் மாதிரி சாலையாக மாற்றப்பட்டு உள்ளது. இதற்காக தபால் நிலையம் அருகே உள்ள ரவுண்டானா பகுதி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அழகுபடுத்தபட்டுள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது. 

இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், நாகரீக உச்சத்தில் உள்ள வளர்ந்த நாடுகளில்தான் நகரங்கள் மேம்படுத்தப்பட்டு அதிசயங்களில் ஒன்றாக திகழும். அதுபோல் கோவை நகரமும் மாறிவருது இருப்பது உள்நாட்டிலா வெளிநாட்டிலா என்கிற நிலை உள்ளது. 

இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அழகு மட்டும் அல்ல, அனுபவித்து மகிழும் பொழுது போக்குகளும் உள்ளது என்பதை நினைக்கும்போது, கோவைக்கு கிடைத்த வரப்பிரசாதமாக கருதுகிறோம். பணிகள் விரைவில் முடிந்து பயன்பாட்டுக்கு வர வேண்டும் என்றனர்.

Next Story