நெகமம் அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது


நெகமம் அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது
x
தினத்தந்தி 17 Feb 2021 6:59 PM GMT (Updated: 2021-02-18T00:33:04+05:30)

நெகமம் அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

நெகமம்,

நெகமத்தில் உள்ள ஆலாம்பாளையத்தில் இருந்து ஏரிப்பெட்டி செல்லும் சாலையில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக நெகமம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதையடுத்து நெகமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல், சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வாய்கால் மேடு அருகே பணம் வைத்து சூதாடிய  6 பேர் போலீசாரை பார்த்ததும் தப்பியோட முயன்றனர். 

அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.  இதில், அவர்கள் ஊஞ்சவேலாம்பட்டியை சேர்ந்த பழனிசாமி  (வயது 54), பாலகிருஷ்ணன் (59), கனகராஜ் (45), பொள்ளாச்சியை சேர்ந்த சதீஷ்குமார் (45), சுப்பிரமணி (50), பாலசுப்பிரமணி (58) என்பது தெரியவந்தது. 

தொடர்ந்து அவர்கள் 6 பேரையும் பணம் வைத்து சூதாடியதாக போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.41 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story