செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் நிலைய எல்லைகள் மாற்றியமைப்பு


செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் நிலைய எல்லைகள் மாற்றியமைப்பு
x
தினத்தந்தி 18 Feb 2021 11:37 AM IST (Updated: 18 Feb 2021 11:37 AM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் நிலைய எல்லைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

வண்டலூர், 


காஞ்சீபுரம் மாவட்டம் 2019-ம் ஆண்டு காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் என இரண்டாக பிரிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இரு மாவட்ட போலீஸ் நிலையம் மற்றும் போலீஸ் நிலைய எல்லைகளை வரை முறைப்படுத்துவது சம்பந்தமாக சமீபத்தில் வெளியிடப்பட்ட அரசு ஆணையின்படி ஏற்கனவே செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்த சாலவாக்கம், உத்திரமேரூர், பெருநகர்போலீஸ் நிலையங்கள் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ்துறை எல்லைக்கு மாற்றப்பட்டது.

காஞ்சீபுரம் மாவட்டம் சாலவாக்கம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட மெய்யூர், சம்பாதிநல்லூர், அத்தியூர், பிலாபூர், சித்தண்டிமண்டபம், நெல்லி, பள்ளியகரம், மங்கலம், நெல்வாய், குமாரவாடி, கருணாகரச்சேரி, சாலவாக்கம் கூட்ரோடு, புக்கதுறை, நடராஜபுரம் மற்றும் கொடிதண்டலம் ஆகிய 15 கிராமங்ளை சேர்ந்த பொதுமக்கள் செங்கல்பட்டு மாவட்டம் படாளம் போலீஸ் நிலையத்தில் இணைக்கப்பட்டுள்ளதால் இந்த கிராம மக்கள் படாளம் போலீஸ் நிலையத்திற்கு சென்று தங்கள் புகார்களை கொடுக்க வேண்டும்.

கூடுவாஞ்சேரி

இதேபோல பாலூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய சீவரம், சங்கராபுரம், வரதாபுரம், லிங்காபுரம், தொள்ளாழி, தொண்டான்குளம், உள்ளாவூர் மற்றும் கொசப்பேட்டை ஆகிய 8 கிராமங்கள் காஞ்சீபுரம் மாவட்டம் சாலவாக்கம் போலீஸ் நிலையத்தில் இணைக்கப்பட்டுள்ளதால் இந்த கிராம மக்கள் சாலவாக்கம் போலீஸ் நிலையத்திற்கு சென்று தங்கள் புகார்களை கொடுக்க வேண்டும். கூடுவாஞ்சேரி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட மாடம்பாக்கம், குத்தனூர், ஆதனூர், கொருக்கந்தாங்கல் ஆகிய 4 கிராமங்கள் காஞ்சீபுரம் மாவட்டம் மணிமங்கலம் போலீஸ் நிலையத்தில் இணைக்கப்பட்டுள்ளதால் இந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மணிமங்கலம் போலீஸ் நிலையத்தில் சென்று தங்கள் புகார்களை கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story