முந்திரி ஆலையில் மேலாளர் தற்கொலை


முந்திரி ஆலையில் மேலாளர் தற்கொலை
x
தினத்தந்தி 18 Feb 2021 7:29 PM IST (Updated: 18 Feb 2021 7:29 PM IST)
t-max-icont-min-icon

முந்திரி ஆலையில் மேலாளர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

குழித்துறை:
முந்திரி ஆலையில் மேலாளர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
முந்திரி ஆலை மேலாளர்
மார்த்தாண்டம் அருகே நெல்வேலிமடம் பகுதியில் ஒரு தனியார் முந்திரி ஆலை உள்ளது. இங்கு கேரள மாநிலம் கொல்லம் மாறநாடு பகுதியை சேர்ந்த பிரமோத் (வயது 52) என்பவர் மேலாளராக பணியாற்றி வந்தார். அவர் முந்திரி ஆலையிலேயே தங்கியிருந்தார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் உணவு உண்ட பின்பு தூங்க சென்றதாக கூறப்படுகிறது. 
நேற்று காலையில் முந்திரி ஆலைக்கு வந்தவர்கள் சமையல் அறையில் பிரமோத் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்த முந்திரி ஆலை நிர்வாகிகளும், போலீசாரும் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
தற்கொலை
முதற்கட்ட விசாரணையில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. அதற்கான காரணம் தெரியவில்லை. மேலாளரது உடல் குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பிரமோத்துக்கும், நெல்வேலி பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே ஏற்கனவே பிரச்சினை இருந்து வந்ததாகவும், இதுதொடர்பாக அவர் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே புகார் செய்திருந்ததாகவும் கூறப்படுகிறது. அதனால் அவர் மன உளைச்சலால் தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இருந்தாலும் அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இறந்த பிரமோத்துக்கு பிரீதி என்ற மனைவியும், ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

Next Story