வாலாஜா அருேக அரசு பஸ்சை சிறை பிடித்து திடீர் போராட்டம்.
வாலாஜா அருேக அரசு பஸ்சை சிறை பிடித்து தரையில் அமர்ந்து திடீர் போராட்டத்தி்ல் ஈடுபட்டனர்.
வாலாஜா
ஆற்காட்டில் இருந்து முசிறி வரை தடம் எண்: 21 என்ற அரசு பஸ் இயக்கப்படுகிறது. அந்தப் பஸ் தற்போது சரியாக இயக்கப்படுவதில்லை. பஸ்சில் பயணிகள் ஏறினால் மட்டுமே இயக்குகிறார்கள். பயணிகள் ஏறவில்லை என்றால் இயக்குவது இல்லை எனக் கூறப்படுகிறது.
இந்தநிலையில் அந்தப் பஸ் நேற்று முன்தினம் ஆற்காட்டில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு முசிறிைய நோக்கி வந்தது. ராமாபுரம் கிராமத்தில் வந்தபோது, அந்தக் கிராம மக்கள் பலர் திரண்டு வந்து அரசு பஸ்சை சிறை பிடித்து தரையில் அமர்ந்து திடீர் போராட்டத்தி்ல் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், அரசு பஸ்சை தினமும் முறையாக இயக்க வேண்டும். காலை 5 மணியில் இருந்து இரவு 9 மணி வரை குறிப்பிட்ட மணி நேரத்துக்கு தடையின்றி இயக்கப்பட வேண்டும், எனக் கூறினர்.
தகவல் அறிந்ததும் வாலாஜா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிராம மக்களிடம் ேபச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story