குமரியில் 92 பறவை இனங்கள் கண்டுபிடிப்பு
குமரியில் 92 பறவை இனங்கள் உள்ளதாக கணக்கெடு்ப்பில் தெரிய வந்துள்ளது.
நாகர்கோவில்:
குமரியில் 92 பறவை இனங்கள் உள்ளதாக கணக்கெடு்ப்பில் தெரிய வந்துள்ளது.
பறவைகள் கணக்கெடுப்பு
குமரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பறவைகள் கணக்கெடுப்பு நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த பணியில் வனத்துறை ஊழியர்களும், தன்னார்வலர்களும் இணைந்து ஈடுபட்டனர். மொத்தம் 50 பேர் 7 குழுக்களாக பிரிந்து கணக்கெடுப்பு நடத்தினர்.
இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நேற்று 2-வது நாளாக நடந்தது. சுசீந்திரம், தேரூர், மணக்குடி மற்றும் உப்பளங்களில் வசிக்கும் பறவைகளை குழுவினர் நவீன கருவிகள் மூலம் தூரத்தில் இருந்து பார்த்து கணக்கெடுத்தனர்.
92 இனங்கள்
இதில் மணக்குடி பகுதியில் ஏராளமான பறவைகள் வசித்து வந்தது தெரியவந்தது. சாமித்தோப்பு பகுதியில் உள்ள உப்பளத்தில் வெளிநாட்டு பறவைகள் காணப்பட்டு உள்ளன. மொத்தத்தில் 2 நாட்களிலும் சேர்த்து92 பறவை இனங்களை கணக்கெடுப்பு குழுவினர் கணக்கெடுத்து உள்ளனர்.
எனினும் குமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டைக்காட்டிலும் இந்த ஆண்டு பறவைகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். அதாவது 35 சதவீதம் அளவுக்கு பறவைகள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கூறினர். எனவே குமரி மாவட்டத்தில் பறவைகள் வரத்தை அதிகரிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பறவை ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Related Tags :
Next Story