உடலில் அணியும் நவீன கேமராக்களுடன் போலீசார் கண்காணிப்பு பணி
உடலில் அணியும் நவீன கேமராக்களுடன் போலீசார் கண்காணிப்பு பணி
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட காவல் துறையினரின் பயன்பாட்டிற்காக உடலில் அணியும் வகையில் 21 புதிய நவீன ரக கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கேமராக்களை தங்கள் சட்டையில் அணிந்து கொண்டு போலீசார் கடமையாற்றும் போது அவர்களை சுற்றியுள்ள நிகழ்வுகளை எளிதாக பதிவு செய்ய முடியும். வாகன சோதனை, பகல் மற்றும் இரவு ரோந்து, போக்குவரத்து கட்டுப்பாடு, கூட்டங்களை கட்டுப்படுத்தல் போன்ற நிகழ்வுகளை பதிவு செய்து கொள்ள முடியும். இதன் மூலம் வீடியோ, ஆடியோ, புகைப்படம் ஆகியவற்றை தெளிவாக பதிவு செய்ய முடியும் என்பதால் போலீசாரின் பணியில் வெளிப்படை தன்மை நிலவுவதோடு முக்கிய குற்றவாளிகள் மற்றும் வாகனத்தின் பதிவு எண்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க முடியும். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 7 உட்கோட்டங்கள், 11 காவல் நிலையங்கள், 3 போக்குவரத்து காவல் நிலையங்களுக்கு என உடலில் அணியும் புதிய நவீன ரக கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story