டிராக்டரில் ஏற்றி சென்ற வைக்கோல் எரிந்து நாசம்


டிராக்டரில் ஏற்றி சென்ற வைக்கோல் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 19 Feb 2021 1:24 AM IST (Updated: 19 Feb 2021 1:24 AM IST)
t-max-icont-min-icon

டிராக்டரில் ஏற்றி சென்ற வைக்கோல் எரிந்து நாசம்

குளித்தலை
குளித்தலை அருகே உள்ள பணிக்கம்பட்டியை சேர்ந்தவர் ராஜா (வயது 63). இவர் நேற்று டிப்பருடன் இணைக்கப்பட்ட டிராக்டரில், குளித்தலை அருகே உள்ள பரளியில் இருந்து மேட்டுமருதூர் பகுதியில் உள்ள ஒருவரது வீட்டிற்கு வைக்கோல் ஏற்றி சென்று கொண்டிருந்தார். மருதூர்- பணிக்கம்பட்டி சாலையில் மேட்டு மருதூர் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, தாழ்வாக இருந்த மின்கம்பி வைக்கோலில் உரசி தீப்பற்றி எரியத்தொடங்கியது. இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் சத்தம் போடவே டிப்பரிலிருந்து டிராக்டர் மட்டும் துண்டித்துவிட்டு அதை ஓட்டி வந்த ராஜா வேறு இடத்தில் நிறுத்தி விட்டார். இந்தநிலையில் வைக்கோலில் பிடித்த தீ மளமளவென பற்றி எரிய தொடங்கியது. அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தீயை அணைக்க முயன்றும் தீயை அணைக்க முடியவில்லை. இதுகுறித்து முசிறி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் துரிதமாக ஈடுபட்டனர். வைக்கோல் என்பதால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. நீண்டநேர போராட்டத்திற்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story