சுரண்டை அருகே வேன் கவிழ்ந்து 4 பேர் படுகாயம்
சுரண்டை அருகே வேன் கவிழ்ந்து 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
சுரண்டை:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தென்காசி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். இதில் கலந்து கொள்வதற்காக ஊத்துமலை அருகே உள்ள அண்ணாமலைபுதூரில் இருந்து ஒரு வேனில் அ.தி.மு.க.வினர் ஆலங்குளத்திற்கு வந்து கொண்டிருந்தனர்.
வேன் சுரண்டை அருகே உள்ள பரங்குன்றாபுரம் விலக்கு பகுதியில் வந்து கொண்டிருக்கும் போது வேகத்தடையில் ஏறி இறங்கியது. அப்போது எதிர்பாராதவிதமாக வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் அண்ணாமலைபுதூரைச் சேர்ந்த முத்தையா மனைவி சுப்புத்தாய் (வயது 68), சண்முகையா மகன் முருகன் (60), சுப்பிரமணியன் மகன் முத்தையா (40), ராமலிங்கதாய் (58) ஆகிய 4 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சுரண்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அக்கம்பக்கத்தில் இருந்த பொதுமக்கள் உதவியுடன் வேன் கண்ணாடியை உடைத்து வேனில் இருந்த மற்றவர்களை பத்திரமாக மீட்டனர். காயமடைந்த 4 பேரையும் மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சுரண்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story