விபத்தில் சிக்கிய முதியவருக்கு உதவிய அமைச்சர்


விபத்தில் சிக்கிய முதியவருக்கு உதவிய  அமைச்சர்
x
தினத்தந்தி 19 Feb 2021 1:56 AM IST (Updated: 19 Feb 2021 1:56 AM IST)
t-max-icont-min-icon

விபத்தில் சிக்கிய முதியவருக்கு உதவிய அமைச்சர்

விருதுநகர்,
விருதுநகர் அருகே பாலவநத்தம்தெற்கு தெருவை சேர்ந்தவர்  முனியாண்டி (வயது65). அருப்புக்கோட்டை-பாலவநத்தம் சாலையில் சென்று கொண்டிருந்த இவர், சாலை விபத்தில் சிக்கி கீழே விழுந்து கிடந்தார். அப்போது  திருச்சுழி அரசு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அந்த சாலை வழியாக  சிவகாசி நோக்கி  அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி  வந்து கொண்டிருந்தார். முதியவர் கீழே விழுந்து கிடந்ததை கண்ட அமைச்சர் தனது வாகனத்தை நிறுத்தினார்.  உடனடியாக தனது உதவியாளர்கள், பாதுகாவலர்களுடன் சென்று முதியவரை  மீட்டு முதலுதவி செய்து  மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தார்.

Next Story