தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றம்


தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றம்
x
தினத்தந்தி 19 Feb 2021 1:59 AM IST (Updated: 19 Feb 2021 1:59 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தென்காசி:
தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் மாசி திருவிழா  கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடியேற்றம்

பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் மாசி திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். 

அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா  அதிகாலை 5 மணி முதல் 6 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தேரோட்டம்

திருவிழா வருகிற 27-ந் தேதி வரை நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் காலையில் அபிஷேக தீபாராதனை, மாலையில் மண்டகப்படி பூஜை மற்றும் சுவாமி- அம்பாள் வீதி உலா ஆகியன நடைபெறுகின்றன.

விழாவின் 9-ம் நாளான வருகிற 26-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் பரஞ்சோதி, தக்கார் சங்கர், கோவில் நிர்வாக அதிகாரி யக்ஞ நாராயணன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

Next Story