இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 Feb 2021 2:07 AM IST (Updated: 19 Feb 2021 2:07 AM IST)
t-max-icont-min-icon

இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர்:
பெட்ரோல்- டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து நேற்று இளைஞர் காங்கிரஸ் கட்சி சார்பில் பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு இளைஞர் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் கோபிநாத் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கட்சியின் மாநில பொதுச் செயலாளர் தங்க.தமிழ்ச்செல்வன், மாவட்ட தலைவர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டு, கண்டனம் தெரிவித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பெட்ரோல்-டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

Next Story