திருப்பூரில் தேசிய மாணவர் படையினருக்கான தேர்வு
திருப்பூரில் தேசிய மாணவர் படையினருக்கான தேர்வு
திருப்பூர்:-
தேசிய மாணவர் படையினருக்கான (என்.சி.சி.) ஏ சான்றிதழ் தோ்வு ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. கர்னல் சதீஷ் தலைமையில் ராணுவ பயிற்சியாளர்கள் தேர்வை நடத்தினார்கள். பள்ளி தலைமை ஆசிரியை ஸ்டெல்லா வரவேற்று பேசினார். இதில் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 47 மாணவிகளும், பழனியம்மாள் பள்ளியில் 50 மாணவிகளும், அகரம் பப்ளிக் பள்ளியில் 19 மாணவிகளும் இந்த தேர்வை எழுதினார்கள்.
இந்த மாணவிகளுக்கு காலையில் எழுத்து தேர்வும், மதியம் செய்முறை தேர்வும், மேப் ரீடிங் மற்றும் ஆயுத பயிற்சியும் நடைபெற்றது. இந்த சான்றிதழ்கள் பெறுவதன் மூலம் மாணவிகள் வருங்காலங்களில் போலீஸ் மற்றும் ராணுவத்தில் சேருவதற்கு உதவியாக இருக்கும் என்பதால் மாணவிகள் உற்சாகமாக தேர்வு எழுதினர். இதற்கான ஏற்பாடுகளை என்.சி.சி. அலுவலர்கள் ஸ்ரீவித்யா மற்றும் லதா மாதேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story