நஞ்சராயன் குளத்தின் தண்ணீர் மாதிரி சேகரிப்பு


நஞ்சராயன் குளத்தின் தண்ணீர் மாதிரி சேகரிப்பு
x
தினத்தந்தி 19 Feb 2021 2:16 AM IST (Updated: 19 Feb 2021 2:16 AM IST)
t-max-icont-min-icon

பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி நஞ்சராயன் குளத்தின் தண்ணீர் மாதிரி சேகரிப்பு

திருப்பூர்:-
திருப்பூர்-ஊத்துக்குளி ரோடு எஸ்.பெரியபாளையம் பகுதியில் நஞ்சராயன் குளம் உள்ளது. இந்த குளத்தில் கழிவுநீர் மற்றும் சாயக்கழிவுநீர் கலப்பதால் நஞ்சராயன் குளம் மாசடைவதாகவும், இதன் மூலம் விவசாயிகள் மற்றும் கால்நடைகள் பாதிக்கப்படுவதாகவும் அந்த பகுதியை சேர்ந்த விவசாயி தாமோதரன் என்பவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்திற்கு மாற்றப்பட்டு, நஞ்சராயன் குளத்தை ஆய்வு செய்ய கலெக்டர் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின் பேரில், தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தின் நீரியல் விஞ்ஞானி ராஜேஷ் தலைமையிலான 4 பேர் கொண்ட குழுவினர் மற்றும் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ஜெயச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் குழுவினர் நஞ்சராயன் குளத்தை நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர்.இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:- நஞ்சராயன் குளத்தின் தண்ணீர் மாதிரி தற்போதுள்ள நிலை குறித்து அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. பசுமை தீர்ப்பாயத்தில் விவரங்களை சமர்பிக்க மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது என்றனர்.

Next Story