திருப்பூரில் பி எஸ் என் எல் ஊழியர்கள் உண்ணாவிரதம்
திருப்பூரில் பி எஸ் என் எல் ஊழியர்கள் உண்ணாவிரதம்
திருப்பூர்,:-
உரிய நேரத்தில் ஊதியம் வழங்க வேண்டும், மருத்துவ செலவுத்தொகையை வழங்க வேண்டும், ஓய்வூதியர் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கத்தினர் சார்பில் நேற்று திருப்பூர் அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இதற்கு கிளைத்தலைவர்கள் ராஜராஜன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் பலர் கலந்துகொண்டனர். நேற்று ஒரு நாள் மட்டும் இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி சிலர் பேசினர்.
Related Tags :
Next Story