அந்தியூரில், கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளர்கள் ரத்த கையெழுத்திட்டு முதல்-அமைச்சருக்கு மனு
அந்தியூரில், கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளர்கள் ரத்த கையெழுத்திட்டு முதல்-அமைச்சருக்கு மனு அனுப்பினர்.
அந்தியூர்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சம்பள உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அந்தியூர் தாலுகா அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் தமிழக முதல்-அமைச்சருக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு தமிழ்நாடு கிராம உதவியாளர் சங்கத்தின் ஈரோடு மாவட்ட தலைவர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார்.
மனுவில் கிராம உதவியாளர்கள் தங்களது ரத்தத்தால் கையெழுத்திட்டனர். பின்னர் கோரிக்கை மனுக்கள் முதல்-அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் அந்தியூர் வட்டார கிராம உதவியாளர் சங்க தலைவர் நல்லா கவுண்டர் மற்றும் அந்தியூர் தாலுகாவுக்கு உள்பட்ட அனைத்து கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story