ஜலகண்டாபுரம் அருகே ஓம் காளியம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் தீ மிதித்தனர்
ஜலகண்டாபுரம் அருகே ஓம் காளியம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் தீ மிதித்தனர்.
மேச்சேரி,
ஜலகண்டாபுரம் அருகே செலவடை தோரமங்கலம் பகுதியில் உள்ள ஓம் காளியம்மன் திருவிழா கடந்த 9-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து 16-ந் தேதி ஓம் காளியம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. நேற்று முன்தினம் கொடிேயற்றுதல் நிகழ்ச்சியும், காலை சக்தி கரக பூஜையும், மதியம் ஊஞ்சல் உற்சவமும் நடந்தது. நேற்று அதிகாலை சிறப்பு மகாதீபாராதனையும், காலை 6 மணிக்கு அக்னி குண்டம் திறப்பும் நடந்தது. பின்னர் மாலையில் தீமிதி விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர். சில பெண்கள் தங்களது கைக்குழந்தைகளுடன் குண்டம் இறங்கினார்கள். மேலும் தீமிதி விழாவின்போது குழந்தைகளுக்கு பாலூட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இரவு வாணவேடிக்கை நடந்தது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
Related Tags :
Next Story