பெட்ரோல்-டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்


பெட்ரோல்-டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 Feb 2021 2:02 AM GMT (Updated: 19 Feb 2021 2:02 AM GMT)

தமிழக இளைஞர் காங்கிரஸ் சார்பில் சென்னை அண்ணாசாலை தாராப்பூர் டவர் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை, 

பெட்ரோல்-டீசல், சமையல் கியாஸ் விலை தொடர் உயர்வு, விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த இளம்பெண் திஷா ரவியை தேச துரோக வழக்கில் கைது செய்தது ஆகியவற்றை கண்டித்து தமிழக இளைஞர் காங்கிரஸ் சார்பில் சென்னை அண்ணாசாலை தாராப்பூர் டவர் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் ஹசன் மவுலானா தலைமை தாங்கினார். பொதுசெயலாளர் இப்ராகீம், மாநில செயலாளர் ரியாஸ் அலி, துணை தலைவர் ஆனந்த் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல்-டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலையை குறைக்க வேண்டும். திஷா ரவியை விடுதலை செய்ய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும், கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஒரு சிலர் காய்கறி மாலை அணிந்திருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது, இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹசன் மவுலானா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் சமையல் கியாஸ் ரூ.345-க்கு விற்பனை ஆனது. தற்போது பா.ஜ.க. ஆட்சியில் தமிழகத்தில் சமையல் கியாஸ் ரூ.800-க்கு விற்பனையாகிறது. வட இந்தியாவில் ரூ.1,000-க்கு விற்கப்படுகிறது. விலைவாசி உயர்வு மக்களை கலங்கடிக்க செய்துள்ளது’ என்று கூறினார்.

Next Story