பார்த்தசாரதி கோவிலுக்கு சொந்தமான ரூ.2.80 கோடி சொத்து மீட்பு அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை.
சென்னை,
சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலுக்கு சொந்தமாக நடேசன் சாலையில் சுமார் 1,850 சதுர அடி கொண்ட மனை மற்றும் அதன் மீது கட்டப்பட்டுள்ள கட்டிடம் உள்ளது. இதனை ஆக்கிரமித்திருந்தவர்கள் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயல்பட்டதால் அவர்களை வெளியேற்ற இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்தது. இதுதொடர்பாக ஆக்கிரமிப்பாளர் தாக்கல் செய்த சீராய்வு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அறநிலையத்துறை உதவி கமிஷனர் பெ.க.கவெனிதா முன்னிலையில் கோவில் செயல் அலுவலர் கோ.ஜெயப்பிரியா, கண்காணிப்பாளர் ப.நிர்மலா, கோவில் ஆய்வாளர்கள் மற்றும் காவல் துறை உதவி கமிஷனர் லட்சுமணன், வருவாய் ஆய்வாளர் அமுதா மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. கட்டிடம் பூட்டு போடப்பட்டு கோவில் வசம் எடுக்கப்பட்டது. இதனுடைய தற்போதைய மதிப்பு ரூ.2 கோடியே 80 லட்சமாகும்.
மேற்கண்ட தகவலை அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
சென்னை ரெயில் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. எலும்பு கூடு ஒன்றை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. பரமசிவத்துக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ரூ.33 லட்சம் அபராதம் செலுத்தவும் விழுப்புரம் கோர்ட்டு உத்தரவிட்டது.