போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் புதிதாக 40 நவீன கண்காணிப்பு கேமராக்கள்


போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் புதிதாக 40 நவீன கண்காணிப்பு கேமராக்கள்
x
தினத்தந்தி 19 Feb 2021 7:41 AM IST (Updated: 19 Feb 2021 7:41 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் புதிதாக 40 நவீன கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாட்டை கமிஷனர் தொடங்கி வைத்தார்.

சென்னை, 

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் உள்புறமும், வெளிபுறமும் புதிதாக 40 நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமராவில் பதிவாகும் காட்சிகளை ஒருங்கிணைத்து பார்க்க நவீன வசதிகளுடன் கூடிய கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கேமராக்களின் செயல்பாட்டையும், அது தொடர்பான கட்டுப்பாட்டு அறையையும் போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார்அகர்வால் நேற்று முறைப்படி தொடங்கி வைத்தார். கூடுதல் கமிஷனர்கள் அமல்ராஜ், கண்ணன், தினகரன் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் அப்போது கலந்துகொண்டனர்.

Next Story