அனுமதியின்றி கற்கள் ஏற்றி வந்த டிப்பர் லாரி பறிமுதல்


அனுமதியின்றி கற்கள் ஏற்றி வந்த டிப்பர் லாரி பறிமுதல்
x
தினத்தந்தி 19 Feb 2021 6:01 PM IST (Updated: 19 Feb 2021 6:01 PM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி அருகே அனுமதியின்றி கற்கள் ஏற்றி வந்த டிப்பர் லாரி பறிமுதல் டிரைவர் கைது

ஆண்டிப்பட்டி :

ஆண்டிப்பட்டி பகுதியில், கல் குவாரிகளில் இருந்து அரசு அனுமதியின்றி கற்கள் ஏற்றி செல்லப்படுவதாக கனிமவளத்துறையினருக்கு புகார் வந்தது.

 இதையடுத்து நேற்று காலை புள்ளியியல் மற்றும் சுரங்கத்துறை வருவாய் அலுவலர் ராஜாராம் தலைமையில் பணியாளர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 


அப்போது அவர்கள் ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.வி.ரெங்கநாதபுரம் விலக்கு பகுதியில் வந்து கொண்டிருந்த டிப்பர் லாரியை மறித்து சோதனை செய்தனர். 


இதில் உரிய அனுமதியின்றி கற்கள் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து டிப்பர் லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்து ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிப்பர் லாரியை ஓட்டி வந்த கதிர்நரசிங்கபுரம் கிராமத்தை சேர்ந்த காளிதாசை (வயது31) கைது செய்தனர்.



Next Story