திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் தேசிய சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு விழா

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் தேசிய சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு விழா
x
தினத்தந்தி 19 Feb 2021 6:14 PM IST (Updated: 19 Feb 2021 6:14 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் சாலை பாதுகாப்பு படை, நாட்டு நலப்பணித்திட்ட அணிகள் மற்றும் திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் ஆகியவை இணைந்து 32-வது தேசிய சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு விழாவை நடத்தின.

திருச்செந்தூர்:

கல்லூரி முதல்வர் பொ.ஜெயந்தி தலைமை தாங்கினார். வட்டார போக்குவரத்து அலுவலர் எஸ்.வினாயகம் முன்னிலை வகித்தார். போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர், ஹமீது ஓட்டுனர் பயிற்சிப்பள்ளி உரிமையாளர் செய்யது பாபு உசேன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
விழாவில் திருச்செந்தூர் உதவி கலெக்டர் தனப்பிரியா, திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹரிஸ்சிங் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களிடையே சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். விழாவிற்கான ஏற்பாடுகளை சாலை பாதுகாப்பு படை பொறுப்பாளர் மா.ஜான்சிராணி, வேதியியல் துறை துணை பேராசிரியர் ஷீலா ஜெபஸ்டா, வணிகவியல் துறை துணைபே பேராசிரியர் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சாந்தா, தமிழ்த்துறை துணைப் பேராசிரியர் ஆகியோர் செய்திருந்தனர்.

Next Story