ரவீந்திரநாத் எம்.பி.யிடம் கோரிக்கை மனு
காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் சார்பில் ரவீந்திரநாத் எம்.பி.யிடம் கோரிக்கை மனு
பெரியகுளம்:
பெரியகுளத்தில் தேனி எம்.பி. ரவீந்திரநாத்தை காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் கிளை தலைவர் பிரேம்குமார், செயலாளர் அகமதுஆதம், உறுப்பினர்கள் கரந்தமலை, ராஜாராம், ஜாபர்சாதிக், இந்தியாவுக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் அன்புக்கரசன், ஆகியோர் நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் இன்சூரன்ஸ் துறையில் அன்னிய நேரடி முதலீட்டு உச்சவரம்பை 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக மாற்றிடக்கூடாது,
ஆயுள் காப்பீட்டு கழக பொது இன்சூரன்ஸ் துறை பங்குகளை பங்கு சந்தையில் பட்டியலிடுவதை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
இதுகுறித்து ரவீந்திரநாத் எம்.பி. கூறுகையில் இந்த பிரச்சினை குறித்து மத்திய அரசு மற்றும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கவனத்துக்கு கொண்டு செல்கிறேன் என்றார்.
Related Tags :
Next Story