விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி கால்நடைகளுடன் விவசாயிகள் உண்ணாவிரதம் அவினாசி அருகே பரபரப்பு
விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி நடுவச்சேரியில் கால்நடைகளுடன் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவினாசி,
விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி நடுவச்சேரியில் கால்நடைகளுடன் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உண்ணாவிரதம்
அவினாசி ஒன்றியம் நடுவச்சேரியில் கூட்டுறவு தொடக்க வேளாண்மை கடன் சங்கம் உள்ளது. இந்த வங்கியில் விவசாயிகள் பெற்ற விவசாய கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். இந்த வங்கியில் கடந்த டிசம்பர் மாதம் கடனை செலுத்திய பிறகும், உரிய நேரத்தில் பயிர்கடன் வழங்காமல், பயிர்கடன் தள்ளுபடிக்கு விவசாயிகளை தகுதி இழக்க செய்த வங்கி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் அந்த வங்கி முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தமுடிவு செய்தனர்.
அதன்படி பாதிக்கப்பட்ட விவசாயிகள் வங்கி முன்பு உண்ணாவிரதம் இருக்க தங்களது கால்நடைகளுடன் நேற்று வங்கிக்கு வந்தனர். பின்னர் வங்கி வளாகத்திற்குள் உண்ணாவிரதம் இருக்க முயன்றனர். ஆனால் போலீசார் அதற்கு அனுமதி மறுத்து விட்டனர். இதனால் வங்கி அருகில் விவசாயிகள் உண்ணாவிரதம் இருந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
தள்ளுபடி செய்ய வேண்டும்
விவசாயிகள் பெற்ற பயிற் கடகைள முழுமையாக தள்ளு படி செய்ய வேண்டும். நடுவச்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் தலைவர், துணை தலைவர் மற்றும் இயக்குனர்கள், சங்க உறுப்பினர் களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை.. எனவே இக்குழுவை கலைத்துவிட்டு மறு தேர்தல மூலம் சங்கத் தலைவர், துணைத்தலைவர், மற்றும் இயக்குனர்கள் தேர்வு செய்ய வேண்டும்.
கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் விடுப்பில் சென்ற விடுப்பு கடிதத்தை தாமதமாக சமர்ப்புத்து தற்காலிக செயலாளர் நியமனத்தை தாமதம் ஏற்படுத்தி, தமிழக அரசின் சிறப்புஅறிவிப்பான விவசாயிகளின் பயிற்கடன் தள்ளுபடியை விவசாயிகள் பெற முடியாமல் செயல்பட்ட நிர்வாகத்தை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
போராட்டத்தில் 100-க்கு மேற்பட்ட விவசாயிகள் மாடுகளுடன் வந்து உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story