3 சாட்சிகளிடம் விசாரணை


3 சாட்சிகளிடம் விசாரணை
x
தினத்தந்தி 19 Feb 2021 9:38 PM IST (Updated: 19 Feb 2021 10:08 PM IST)
t-max-icont-min-icon

கோடநாடு கொலை வழக்கில் 3 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஊட்டி

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கேரள மாநிலத்தை சேர்ந்த சயான், மனோஜ் உள்பட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். 

இந்த வழக்கு விசாரணை நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.  இந்த  வழக்கு விசாரணைக்கு வந்தது. ஊட்டி கிளை சிறையில் இருந்து சயான், மனோஜ் இருவரை போலீசார் அழைத்து வந்து ஊட்டி மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 

ஜாமீனில் உள்ள உதயகுமார், ஜித்தின்ராய் ஆகிய 2 பேர் ஆஜராகினர். சதீசன், சந்தோஷ்சாமி, மனோஜ்சாமி, திபு, சம்சீர் அலி உள்பட 6 பேர் ஆஜராகவில்லை. 

நீதிபதி அருணாச்சலம் முன்னிலையில் தங்கும் விடுதி உரிமையாளர் சாந்தா, விடுதி பணியாளர் பிரதீஸ், ஜித்தின்ராயின் உறவினர் ஷாஜி ஆகிய 3 சாட்சிகளிடம் எதிர்தரப்பு வக்கீல்கள் குறுக்கு விசாரணை நடத்தினர். தொடர்ந்து வழக்கு விசாரணை வருகிற 23-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. 


Next Story