பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ரெயில் மூலம் சின்னசேலத்துக்கு 53 ஆயிரம் மூட்டை பச்சரிசி வந்தது
பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ரெயில் மூலம் சின்னசேலத்துக்கு 53 ஆயிரம் மூட்டை பச்சரிசி வந்தது
சின்னசேலம்
இந்திய உணவு கழகம் மூலம் பஞ்சாப் மாநிலம் பகபூர்ணா பகுதியிலிருந்து 42 சரக்கு ரெயில் பெட்டிகளில் 2 ஆயிரத்து 600 டன் எடையுள்ள 53 ஆயிரம் மூட்டை பச்சரிசி பொது விநியோகத் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்காக சின்னசேலம் ரெயில் நிலையத்துக்கு நேற்று வந்தது.
பின்னர் இந்த அரிசி மூட்டைகளை லாரிகள் மூலம் சின்னசேலம் கூகையூர் சாலையிலுள்ள தமிழ்நாடு சேமிப்பு கிடங்கில் இறக்கி வைக்கப்பட்டது. இந்தப் பணியினை தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு மேலாளர் பிரபு, இந்திய உணவுக் கழக மேலாளர் சகாதேவன், உதவியாளர்கள் திருநீலகண்டன், குமார், ஒப்பந்ததாரர் தியாகராஜன், இளநிலை உதவியாளர் சுவீட் ஆகியோர் மேற்பார்வை செய்தனர். இந்த அரிசி மூட்டைகள் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story