குறி சொல்லிய பெண் உள்பட 2 பேரிடம் தீவிர விசாரணை
தாயாரின் ஆவி உடலில் புகுந்ததாக பூஜைக்கு சென்ற கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக குறி சொல்லிய பெண் உள்பட 2 பேரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
பனைக்குளம்.
தாயாரின் ஆவி உடலில் புகுந்ததாக பூஜைக்கு சென்ற கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக குறி சொல்லிய பெண் உள்பட 2 பேரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
கல்லூரி மாணவி
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியன் கோரவள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வீரசெல்வம். இவரது மனைவி கவிதா. இவர்களது மகன் கோபிநாத் (வயது21), மகள் தாரணி (19).
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிதா தற்கொலை செய்தகொண்டார். கோபிநாத் சென்னையில் வேலைசெய்துவருகிறார். தாரணி கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் தாரணிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர்.
சில தினங்களுக்கு முன்பு வாணியன்குளத்தில் உள்ள குறிசொல்லும் பெண்ணிடம் தாரணியை அழைத்துக்கொண்டு அவரது தந்தை சென்றுள்ளனர். அப்போது தாரணியின் உடலில் அவரது தாய் கவிதா ஆவியாக புகுந்து இருப்பதாக குறி சொல்லி இருக்கிறார். பின்னர் ஆவியை விரட்ட தாரணியின் முகத்தில் தண்ணீர் அடித்து விபூதியை பூசி அனுப்பி வைத்துள்ளார். மீண்டும் தாரணிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் திருப்பாலைக்குடியில் உள்ள குறி ெசால்பவரிடம் அழைத்துச் சென்று சில பூஜைகள் செய்துள்ளனர்.
பின்னர் உச்சிப்புளி காமராஜர் நகரில் உள்ள அத்தை வீட்டில் தாரணியை தங்க வைத்து அங்கு அவரை கவனித்து வந்த நிலையில் மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தாரணியை உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு அவர் இறந்து விட்டார் என்ற தகவல் தெரிவித்தவுடன் ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடல் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த உச்சிப்புளி போலீசார் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்குச் சென்று அங்கு தாரணியின் உடல் பிரேத பரிசோத னைக்கு ஏற்பாடு செய்தனர். பின்னர் தாரணியின் தந்தை வீரசெல்வம் மற்றும் குறி சொன்ன பெண் உள்பட இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து உச்சிப்புளி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-----------------
Related Tags :
Next Story