தனியார் நிறுவன ஊழியர் போக்சோ சட்டத்தில் கைது
பள்ளி மாணவியை கடத்தி திருமணம், தனியார் நிறுவன ஊழியர் போக்சோ சட்டத்தில் கைது.
பேரணாம்பட்டு
பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த 16 வயது பிளஸ்-1 மாணவி ஒருவர் கொரோனா ஊரடங்கில் ஆந்திரா மாநிலம் பைரெட்டி பல்லி மண்டலம் மோட்ல பல்லி கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றிருந்த போது, உறவினரான தனியார் நிறுவன ஊழியர் ரவிபிரகாசம் (24) என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து ரவிபிரகாசம் குடும்பத்தினர் மாணவியின் வீட்டுக்கு சென்று பெண் கேட்டனர். மாணவியின் பெற்றோர் தங்கள் மகள் படிப்பதால் திருமணம் செய்து தர மறுத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி மாணவி பள்ளிக்கு சென்ற போது ரவிபிரகாசம் மாணவியை ஆசை வார்த்தை கூறி பெங்களூருவுக்கு அழைத்து சென்றுதிருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவியின் தாயார் பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்குப்பதிவு செய்து குடியாத்தம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வழக்கை ஒப்படைத்தார். இந்த நிலையில் பேரணாம்பட்டு அருகே பத்தலப் பல்லி சோதனை சாவடி பகுதியில் சுற்றித் திரிந்த ரவிபிரகாசம் மற்றும் மாணவியை மீட்டு, மாணவியை கடத்தியதாக ரவிபிரகாசத்தை போக்சே சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story