மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தர்மபுரியில் ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தர்மபுரியில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 Feb 2021 11:22 PM IST (Updated: 19 Feb 2021 11:46 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தர்மபுரி,

பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் ஆகியவற்றின் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் ஜோதிபாசு தலைமை தாங்கினார். 

மாவட்டசெயலாளர் குமார் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட  செயற்குழு உறுப்பினர்கள் மாரிமுத்து, இளம்பரிதி, கிரைஸாமேரி, ராமச்சந்திரன், சிசுபாலன், அர்ச்சுனன், நிர்வாகிகள் குப்புசாமி, ஜெயா, பூபதி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். 

ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும் பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Next Story