கொல்லிமலையில் முதியவரை அடித்து கொன்ற அண்ணன் மகன் கைது


கொல்லிமலையில் முதியவரை அடித்து கொன்ற அண்ணன் மகன் கைது
x
தினத்தந்தி 19 Feb 2021 11:28 PM IST (Updated: 19 Feb 2021 11:28 PM IST)
t-max-icont-min-icon

கொல்லிமலையில் முதியவரை அடித்து கொன்ற அண்ணன் மகன் கைது

சேந்தமங்கலம்:
கொல்லிமலையில் முதியவரை அடித்து கொன்றதாக அவருடைய அண்ணன் மகன் கைது செய்யப்பட்டார்.
பெண்களிடம் அத்துமீறல்
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஒன்றியத்தில் உள்ள பயில்நாடு ஊராட்சி மேக்கினிக்காடு பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 60). இவர் கடந்த சில மாதங்களாக சற்று மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் இவர் சில நாட்களாக தெருவில் செல்லும் பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் தெரிகிறது. 
இதனை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கண்டித்தனர். இதையடுத்து குப்புசாமியை அவரது வீட்டில் கட்டிப்போட்டு உறவினர்கள் உணவு கொடுத்து வந்தனர். இந்தநிலையில் சம்பவத்தன்று குப்புசாமி திடீரென வீட்டில் இறந்து கிடந்தார். இதுகுறித்து வாழவந்தி நாடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 
தலையில் காயம்
முதலில் தற்கொலை என வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து பிரேத பரிசோதனை அறிக்கையில் குப்புசாமியின் தலையில் பலமாக தாக்கப்பட்டு அதில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது. 
இதையடுத்து போலீசார் இதனை கொலை வழக்காக மாற்றி விசாரணையை முடுக்கி விட்டனர். முதற்கட்ட விசாரணையில் முதியவர் குப்புசாமி பெண்களிடம் அத்துமீறி நடந்ததால் ஆத்திரமடைந்த அவரின் அண்ணன் மீனாட்சி என்பவரது மகன் பிரகாஷ் (37) என்பவர் குப்புசாமியை சரமாரியாக தாக்கியதில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பிரகாசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
=======

Next Story