குடிசை தீயில் எரிந்து நாசம்


குடிசை தீயில் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 20 Feb 2021 12:32 AM IST (Updated: 20 Feb 2021 12:32 AM IST)
t-max-icont-min-icon

குடிசை தீயில் எரிந்து நாசமாகின.

கறம்பக்குடி, பிப்.20-
கறம்பக்குடி அருகே உள்ள காட்டாத்திகாந்தி நகரை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 55). நேற்று மதியம் திடீரென்று இவரது குடிசை தீப்பற்றி எரிந்தது. இதைக்கண்ட அப்பகுதியினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. இது குறித்து பட்டுக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கிருந்து தீயணைப்பு நிலைய வீரர்கள் வருவதற்குள் குடிசை வீடு முற்றிலும் எரிந்தது. வீட்டில் இருந்த பணம், நகை, பாத்திரங்கள், பீரோ, கட்டில் உள்ளிட்ட அனைத்து பொருட்கள், ஆவணங்கள் தீயில் எரிந்து நாசமாகின. இது குறித்து கறம்பக்குடிபோலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story