தென்காசி மாவட்டத்துக்கு வருகை: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு
தென்காசி மாவட்டத்துக்கு வருகை தந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்துக்கு வருகை தந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
உற்சாக வரவேற்பு
தென்காசி மாவட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் மேற்கொண்டார். குற்றாலம் விடுதியில் தங்கியிருந்த அவர் காலையில் வேனில் கடையநல்லூருக்கு சென்று பிரசாரம் செய்தார்.
பின்னர் புளியங்குடியில் நடந்த மகளிர் குழுவினருடனான கலந்துரையாடலிலும், சங்கரன்கோவிலில் நடந்த இளைஞர் இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் கூட்டத்திலும் பங்கேற்று முதல்-அமைச்சர் பேசினார்.
முதல்-அமைச்சரின் வருகையையொட்டி, வழிநெடுகிலும் சாலையின் இருபுறமும் வரவேற்பு பதாகைககள் மற்றும் கட்சிக்கொடிகள், தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தன. பல்வேறு கிராமங்களிலும் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு வந்து முதல்-அமைச்சரை உற்சாகமாக வரவேற்றனர்.
பூரண கும்ப மரியாதை
கடையநல்லூரில் திறந்த வேனில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தபோது, அங்குள்ள வீடுகளின் மாடியில் நின்றவாறு ஏராளமானவர்கள் முதல்-அமைச்சரின் பேச்சை கேட்டனர்.
புளியங்குடியில் முதல்-அமைச்சருக்கு பெண்கள் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்பு அளித்தனர்.
சங்கரன்கோவிலில் விவசாயி போன்று வேடம் அணிந்த குழந்தைகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ரோஜாப்பூக்கள் வழங்கி வரவேற்றனர். அதை மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்ட அவர் அந்த குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். பிரசார நிகழ்ச்சி நடைபெற்ற இடங்களில் வாழை மரங்கள், கரும்புகள் கட்டப்பட்டு இருந்தன.
கலந்து கொண்டவர்கள்
முதல்-அமைச்சரின் பிரசார நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி, அ.தி.மு.க. வழிகாட்டுதல் குழு உறுப்பினர் மனோஜ் பாண்டியன், மாநில மகளிர் அணி செயலாளர் விஜிலா சத்யானந்த், தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ., வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா, மனோகரன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story