பாளையங்கோட்டை: ராஜகோபால சுவாமி கோவிலில் சப்பர பவனி
பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவிலில் சப்பர பவனி நடந்தது.
நெல்லை:
பாளையங்கோட்டை வேத நாராயணன், அழகிய மன்னர் ராஜகோபாலசுவாமி கோவிலில் ரதசப்தமி விழா நடந்தது. இதை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 6 மணிக்கு சூரியபிறை வாகனத்தில் ராஜகோபால சுவாமி வீதிஉலா சென்றார். 8 மணிக்கு 2 கருட வாகனத்திலும், 10 மணிக்கு சேஷ வாகனத்திலும் பெருமாள் வீதி உலா சென்றார்.
மாலையில் இந்திர விமானத்தில் தாயாருடன் அழகிய மன்னாரும், அனுமன் வாகனத்தில் ராஜகோபாலரும் வீதி உலா வந்தனர். 6 மணிக்கு அன்ன வாகனத்தில் அழகிய மன்னாரும், இரவு 9 மணிக்கு ராஜகோபால சுவாமி சந்திர பிறை வாகனத்திலும் வீதி உலா வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story