தாராபுரம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
தாராபுரம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
தாராபுரம்:-
தாராபுரம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தொழிலாளி
அந்தமான் நிக்கோபார் தீவை சேர்ந்தவர் வினோதன் (வயது 27). இவர் தாராபுரம் உப்புத்துறை பாளையம் பகுதியில் உள்ள தனியார் மரம் அரவை மில்லில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் அந்த பகுதி தோட்டத்தில் உள்ள வேப்பமரத்தில் வினோதன் தூக்கில் தொங்கியவாறு இருந்துள்ளார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் தாராபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் மற்றும் போலீசார் வினோதனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு வினோதனை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
போலீசார் விசாரணை
இதையடுத்து அவருடைய உடலை பிரேத பரிசோதனை அறைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் வினோதன் மது போதைக்கு அடிமையானவர் என்பதும், இவருக்கு திருமணம் ஆகவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story