கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி


கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி
x
தினத்தந்தி 20 Feb 2021 1:07 AM IST (Updated: 20 Feb 2021 1:07 AM IST)
t-max-icont-min-icon

கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழந்தான்.

லாலாபேட்டை
கரூர் மாவட்டம், லாலாபேட்டையை அடுத்த நந்தன்கோட்டை காலனியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது மகன் நித்திஷ்குமார் (வயது 9). இவன் லாலாபேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்தான். நேற்று மாலை தனது வீட்டின் அருகே உள்ள தோட்டத்து கிணற்றின் மேல் பகுதியில் அமர்ந்து நித்திஷ்குமார் மீன்பிடித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவன் நிலைதடுமாறி கிணற்றுக்குள் தவறி விழுந்தான். சிறிது நேரத்தில் அவன் தண்ணீரில் மூழ்கி இறந்தான். இதுகுறித்து தகவல் அறிந்த முசிறி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கிணற்றுக்குள் இறங்கி மாணவனின் உடலை மீட்டனர். பின்னர், நித்திஷ்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து லாலாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Next Story