திசையன்விளையில் மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலி


திசையன்விளையில்  மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலி
x
தினத்தந்தி 20 Feb 2021 1:23 AM IST (Updated: 20 Feb 2021 1:23 AM IST)
t-max-icont-min-icon

திசையன்விளையில் மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலியானாள்.

திசையன்விளை:
திசையன்விளையில் மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலியானாள். 

9 வயது சிறுமி

நெல்லை மாவட்டம் திசையன்விளை நல்லதம்பி தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மனைவி பிந்து. இந்த தம்பதியின் மகள் ஹன்சிகா (வயது 9). இந்த நிலையில் பிந்து தனது கணவர் ரமேசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். பிந்துவுடன் சிறுமி ஹன்சிகா இருந்து வந்தாள்.

கடந்த 17-ந்தேதி ஹன்சிகாவுக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது. இதனால் அவளை திசையன்விளையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை. 

பரிதாப சாவு

இதனால் அவளை மேல் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சிறுமி ஹன்சிகா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பிந்து அளித்த புகாரின் பேரில், திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story